6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள்: சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பெரிய நரிகோட்டை என்ற கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இந்த தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக காளையார்கோவில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் கடந்த 2014-ல் பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது, பள்ளியில் பயின்ற 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தலைமை ஆசிரியர் முருகன் மீது குற்றம்சாட்டி, சிறுமியின் பாட்டி ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கானது சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரத் ராஜ், இன்று வழக்கின் மீதான தீர்ப்பினை வழங்கியுள்ளார். அதில், 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளியான முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார்.

மேலும் குற்றச்சம்பவத்திற்கு அபராதமாக சிறை தண்டனையுடன் ரூ.69,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட 6 சிறுமிகளுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.29 லட்சம் வழங்க சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் விதித்து தீர்ப்பளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!