9 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு; ஹெச்.எம்.க்கு 14 ஆண்டு சிறை: தூத்துக்குடி போக்சோ கோர்ட் தீர்ப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவியர்களான 9 சிறுமிகளிடம், கடந்த 2022ம் ஆண்டு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்தார். புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து பள்ளியின் தலைமை ஆசிரியரான விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சின்னகொல்லம்பட்டியை சேர்ந்த தாமஸ் சாமுவேல் (57) என்பவரை கைது செய்தனர்.

இன்ஸ்பெக்டர் பத்மாவதி விசாரணை நடத்தி கடந்த 23.6.22 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை, தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி சுவாமிநாதன் விசாரித்து, தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேலுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 10 மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்