உதவி கேட்டு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கர்நாடகா முன்னாள் பா.ஜ முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு

பெங்களூரு: கர்நாடக முன்னாள் பா.ஜ முதல்வர் எடியூரப்பா மீது சதாசிவ நகர் போலீஸ் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த மமதாசிங் என்பவர் சதாசிவ நகர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் தனிப்பட்ட காரணங்களுக்காக உதவி கேட்டு கடந்த 2.2.2024 அன்று காலை 11 மணி முதல் 11.30 மணி சமயத்தில் 17 வயதான எனது மகளுடன் முன்னாள் முதல்வர் பி. எஸ். எடியூரப்பா வீட்டிற்கு சென்றேன். அப்போது என் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒரு மாதம் கடந்து புகார் கொடுக்க காரணம் என்ன ? என்று போலீசார் கேட்டதற்கு, குற்றம் செய்தவர் முன்னாள் முதல்வர் என்பது மட்டும் அல்லாமல் சமூகத்தில் பெரியவராக இருப்பதால் பயம் மற்றும் அச்சம் காரணமாக தாமதமாக புகார் கொடுப்பதாக தெரிவித்தார். அதையேற்று கொண்ட போலீசார் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தில் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி.பரமேஸ்வர் கூறும்போது,’இதில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. ஒரு பெண் வந்து புகார் கொடுத்துள்ளார். போலீசார் சட்டப்படி வழக்கு பதிவு செய்துள்ளனர்’ என்றார்.

இந்நிலையில் எடியூரப்பா மீது மமதாசிங் கொடுத்துள்ள புகார் தொடர்பாக சதாசிவநகர் மற்றும் ஐகிரவுண்டு போலீசார் நேற்று காலை டாலர்ஸ் காலனியில் உள்ள முதல்வர் எடியூரப்பாவின் வீட்டிற்கு சென்று, புகார் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி சில விவரம் பெற்றனர். அதன்பின் விசாரணை தொடங்கினர். இதனிடையில் எடியூரப்பா மீதான போக்சோ புகார் வழக்கை சிஐடி போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்கும் பொறுப்பை மாநில உள்துறை அமைச்சரிடம் ஒப்படைத்து உத்தரவிட்டுள்ளது. சிஐடியில் உள்ள பெண் போலீஸ் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்துள்ளதாக தெரியவருகிறது.

 

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு