ஜிம்பாப்வே அணியுடன் டி20 தொடர்; இந்திய அணிக்கு கில் கேப்டன்: அபிஷேக், பராக், நிதிஷுக்கு வாய்ப்பு

புதுடெல்லி: ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர் ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை மாத தொடக்கத்தில் ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளம் மைதானத்தில் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் ஜூலை 6, 7, 10, 13, 14 தேதிகளில் நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, கில் தலைமையில் மொத்தம் 15 வீரர்கள் அடங்கிய அணியை தேர்வுக் குழுவினர் அறிவித்தனர்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அபிஷேக் ஷர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ரியான் பராக், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் முதல் முறையாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்தியா: ஷுப்மன் கில் (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெயிக்வாய், அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு