பழநி முருகனுக்கு வைரக்கற்கள் பதித்த தங்கவேல் காணிக்கை

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நேற்று வந்த கோவையைச் சேர்ந்த தொழிலதிபரான முருக பக்தர் ஒருவர், முருகனுக்கு வைரக்கற்கள் பதித்த, தங்கத்தினால் செய்யப்பட்ட வேல் ஒன்றை காணிக்கையாக செலுத்தி உள்ளார். இந்த வேலிற்கு சண்முகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து உச்சிகால பூஜையில் மூலவர் சிலையின் அருகில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த வேல் கார்த்திகை போன்ற விசேஷ தினங்களில் முருகனுக்கு சாத்தப்பட உள்ளது. காணிக்கையாக வழங்கப்பட்ட தங்கத்தினால் செய்யப்பட்ட வேல் 1.09 கிலோ எடை கொண்டது.

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!