ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சென்னை இளைஞர்கள் 3 பேரின் குடும்பத்தினருக்கு ரூ6 லட்சம் நிவாரணம்: அமைச்சர் வழங்கினார்


சென்னை: மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்ற போது ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த 3 இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் நிதியுதவியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று வழங்கினார். சென்னை மாமல்லபுரத்திற்கு 17 மாணவர்கள் கடந்த 1ம் தேதி சுற்றுலா சென்றனர். இதில் 3 இளைஞர்கள் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து தமிழ்நாடு முதல்வர் உத்தரவின்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்த க.கவுதம்,

சூளை பகுதியைச் சேர்ந்த ப.பிரகாஷ், அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ம.ரோஷன் ஆகிய 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் வீதம் மொத்தம் 6 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். அப்போது, சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மாவட்ட வருவாய் அலுவலர் சு.கீதா, மண்டலக் குழுத் தலைவர்கள் பி.ராமுலு, கூ.பி.ஜெயின், சரிதா மகேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி இராஜேஸ்வரி, எல்.சுந்தர்ராஜன், சி.தனி ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

ஹிஸ்புல்லா மீதான 21 நாட்கள் போர்நிறுத்த முன்மொழிவை ஏற்க முடியாது: நட்பு நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பதில்

ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது லோக் ஆயுக்தா காவல் துறை