திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்துக்கு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ்

திண்டுக்கல்: திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்தது தெரியவந்தது. திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்துக்கு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் கடந்த ஆட்சியில் நெய்க்கு பதிலாக விலங்கின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்பு குற்றச்சாட்டை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். லட்டுக்கு பயன்படுத்தப்படும் உபபொருட்களில் தரமற்ற பொருட்கள் மற்றும் விலங்குகளின் கொழுப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டு உள்ளதாக உணவுப்பாதுகாப்புத்துறை ஆய்வில் தெரிவிக்கபட்டது.

இதனை தொடர்ந்து திருப்பதி லட்டு தயாரிக்க நெய் சப்ளை செய்த 4 நிறுவனங்களிடம் இருந்து மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பட்டது. இதனை அடுத்து திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்துக்கு ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் நெய்யில் கலப்படம் இருந்தது பரிசோதனையில் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

அரசின் திட்டங்களை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

ஃபோர்டு நிறுவனத்தின் மனுவை பரிசீலனை செய்து அனுமதி வழங்கியது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

எழும்பூர் கண்ணப்பர் திடல் அருகே 1 14 குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்கி ஆணை வழங்கிய உதயநிதிக்கு காங். பாராட்டு