ஜெர்மனியில் உள்ள மனைவிக்கு பதிவு தபாலில் ‘தலாக்’: காஞ்சிபுரம் கணவர் கைது

ஆரணி: காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய காஞ்சிபுரம் லிங்கப்பன் தெருவை சேர்ந்தவர் இஸ்மாயின் ஷரிப். இவரது மகன் நாசர்ஷரிப்(35). இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மஸ்தான்ஷரிப் மகள் ஆயிஷாபிர்தோஸ்(33) என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

குடும்ப தகராறு காரணமாக ஆயிஷா பிர்தோஸ் கடந்த தனது கணவரை பிரிந்து ஜெர்மன் நாட்டிற்கு ேவலைக்கு சென்றுவிட்டாராம். இதேபோல், நாசர்ஷரிப்பும் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாசர்ஷரிப், இஸ்லாமிய முறைப்படி திருமணமுறிவு (முத்தலாக்) செய்வதாக தெரிவித்து பதிவு தபால் மூலம் ஆயிஷாபிர்தோசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

முத்தலாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் மூலம் தலாக் அனுப்பியதை கண்டு ஆயிஷாபிர்தோஸ் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ஆயிஷாபிர்தோஸ் ஜெர்மனில் இருந்து நேற்று முன்தினம் நாடு திரும்பினார். பின்னர் இதுகுறித்து ஆரணி மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நாசர்ஷரிபிடம் விசாரணை நடத்தினர்.

அதில் முறைப்படி விவாகரத்து பெறாமல், 2வது திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நாசர் ஷரிப், அவரது தந்தை இஸ்மாயின் ஷரிப் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!