இனப்படுகொலை குற்றச்சாட்டு: ஷேக் ஹசீனா மீதான விசாரணை துவக்கம்

டாக்கா: வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த 5ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனை தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற முகம்மது யூசுப் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. ஹசீனா அரசு கவிழ்ந்ததை அடுத்து நடந்த வன்முறை சம்பவங்களில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மூன்று வார வன்முறை சம்பவங்களில் இந்த பலி எண்ணிக்கை 560ஆக அதிகரித்தது.

இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்ததால் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் முன்னாள் பிரதமர் கலிஜா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சியினர் நேற்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த வன்முறைகளுக்காக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே இடைக்கால அரசானது, ஜூலை 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை மாணவர்கள் போராட்டத்தின்போது நடந்த இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களின் குற்றச்சாட்டின் பேரில் விசாரணையை தொடங்கியுள்ளது.

Related posts

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகாமல் இருக்க நியாயமான காரணங்கள் இருந்தால் எடப்பாடிக்கு விலக்கு அளிக்கலாம்: சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் பதில் மனு

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 500 பெண் பணியாளர்கள் தங்குவதற்கு 870 படுக்கை வசதியுடன் குடியிருப்புகள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்து

மாதவரத்தில் இருந்து உல்லாசத்துக்கு அழைத்து வந்தபோது தகராறு இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்த சைக்கோ இன்ஜினியர்: துண்டு துண்டாக வெட்டி கொடூரம்; போலீஸ் அதிகாரி வீட்டு முன் வீச்சு; சென்னை துரைப்பாக்கத்தில் பயங்கரம்