பொது சிவில் சட்டம் குறித்த மோடி பேச்சுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி, பொது சிவில் சட்டம் குறித்து பேசிய பேச்சு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தற்போதுள்ள சிவில் சட்டம் ஒரு வகுப்புவாத சிவில் சட்டம் என்று கூறி நாட்டுக்கு தேவை மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்ற விஷமத்தனமான கருத்தை கூறியிருக்கிறார். அம்பேத்கர் கண்ட கனவை சிதைக்கிற வகையில் பிரதமர் மோடி செயல்படுவது கண்டிக்கத்தக்கது. ‘ராகுலை அவமதிப்பதா’: செல்வப்பெருந்தகையின் மற்றொரு அறிக்கையில், ‘‘டெல்லியில் சுதந்திர தின விழாவில், மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு, கடைசி வரிசைக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கி ஒன்றிய பாஜ அரசு அவமதித்துள்ளது ’’ என கூறியுள்ளார்.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு