பொது சிவில் சட்டம் தொடர்பாக விரைவில் சட்ட ஆணையத்திற்கு அதிமுக கடிதம்..!!

சென்னை: பொது சிவில் சட்டம் தொடர்பாக விரைவில் சட்ட ஆணையத்திற்கு அதிமுக கடிதம் அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் என்பது சட்ட ஆணையத்தாலும், மத்திய அமைச்சகத்தாலும் முடிக்கிவிடப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் தங்களது கருத்துக்களை சட்ட ஆணையத்திற்கு அனுப்பி வருகிறார்கள். பொதுமக்கள், தனிநபர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகள் சார்பாகவும் தங்களது கருத்தை தெரிவிக்கலாம் என்ற அவகாசத்தை சட்ட அமைச்சகம் வழங்கி இருந்தது.
கடந்த 14ம் தேதியுடன் முடிவடைந்த கால அவகாசமானது, 2 வாரங்களுக்கு மேலும் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுகவின் சார்பாக கட்சியினுடைய கருத்தை கடிதம் மூலமாக சட்ட ஆணையத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கடிதத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை எந்த வடிவத்திலும் இந்தியாவில் நிறைவேற்றக்கூடாது. அது சிறுபான்மையினரை கடுமையாக பாதிக்கும் என்ற கருத்து வலியுறுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக சார்பில் இன்று அல்லது நாளை சட்ட ஆணையத்திற்கு அதிகாரபூர்வமாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்திற்கு எதிராக ஏற்கனவே திமுக கடிதம் அனுப்பியுள்ளது நினைவுகூரத்தக்கது.

Related posts

விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது

ஜூலை-08: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு