பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்துகளை தெரிவிக்க மேலும் அவகாசம் வழங்கியது சட்ட ஆணையம்

டெல்லி: பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்துகளை தெரிவிக்க சட்ட ஆணையம் மேலும் அவகாசம் அளித்துள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டதை அடுத்து மேலும் 2 வார காலம் நீட்டித்தது. இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக சட்ட ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் மட்டுமின்றி, காகித வடிவிலும் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக சட்ட ஆணையம் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு பொது சிவில் சட்டம் வழிவகை செய்கிறது

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்