காசா மீது விமான தாக்குதல்: 20 பாலஸ்தீனர்கள் பலி

காஸா: காஸாவில் கடந்த ஒன்பது மாதமாக இஸ்ரேல் நடத்தி வரு தொடர்ந்து நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு கத்தார் தலைநகர் டோகாவில் நேற்று சமரச பேச்சுவார்த்தை தொடங்கியது. பேச்சுவார்த்தையில் பங்கேற்க எகிப்து, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த புலனாய்வு பிரிவு அதிகாரிகளும்,இஸ்ரேலை சேர்ந்த அதிகாரிகளும் டோகாவுக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில்,காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரபடுத்தி உள்ளது. காஸாவில் உள்ள டெய்ர் அல் பலா அகதிகள் முகாம் அருகே உள்ள வீடுகளின் மீது நேற்று காலையில் இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தியதில் 5 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து டெய்ர் அல் பலாவின் இன்னொரு பகுதியில் இஸ்ரேல் விமான படை தாக்குதலில் ஒரு சிறுவன் உட்பட 8 பேர் பலியானார்கள்.

Related posts

வியாட்நாமில் யாகி புயல் தாக்கியதில் 14 பேர் பலி; 176 பேர் காயம்

குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு