காலம் நாம் யார் என்பதை தீர்மானிக்கும்.. காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டர்ஸ் டிவிட்

காசா: காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டர்ஸ் வலியுறுத்தி இருக்கிறார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வரும் நிலையில் காசாவின் நிலை மோசமாகி வருகிறது. இது குறித்து X பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டர்ஸ் மத்திய கிழக்கு நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பிணைக்கைதிகளாக அழைத்து செல்லப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் உயிர் காக்கும் பொருட்கள் மக்களிடம் தங்கு தடையின்றி கொண்டு சேர வழிவகுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது உண்மைக்கான நேரம் என்றும் காலம் நாம் யார் என்பதை தீர்மானிக்கும் எனவும் அவர் தம்முடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்