திருத்தணியில் கேஸ் கசிவால் தீ விபத்து: 3 பெண்கள் படுகாயம்

திருத்தணி : திருத்தணி பழைய சென்னை சாலையில் நேதாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் (40). இவர் எலக்ட்ரீசியன் பணி செய்து வருகிறார். மேலும் இவரது தங்கை அம்மு அவரது கணவர் பாபுஜி உள்பட 10க்கும் மேற்பட்டோர் கூரை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று நண்பகல் கோவிந்தராஜ் மற்றும் இவர் வீட்டில் இருந்த ஐந்து பேர் நேற்று முன்தினம் இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டில் இருந்த அம்மு(45) பத்மாவதி(36) மற்றும் விமலா, ஆகிய மூன்று பெண்களும் இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறினர். ஆனால் வீட்டில் ஏற்றி வைத்த காமாட்சி அம்மன் விளக்கு எரிவதால் அதை அணைக்க உள்ளே சென்ற போது கேஸ் அதிகமாக கசிந்த காரணத்தினால் எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர சத்தத்துடன் விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்து அனைத்து பொருட்களும் தீயில் சேதம் அடைந்தது. மேலும் அப்போது வீட்டிற்குள் இருந்த பத்மாவதி, அம்மு ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து காயமுற்றவர்களை அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி தீயணைப்பு படை வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுக்க முதலில் மின்சாரத்தை துண்டித்தனர். இதனைத் தொடர்ந்து கேஸ் கசிவு ஏற்பட்ட சிலிண்டரை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

படுகாயம் அடைந்த அந்த 3 பெண்களும் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவிந்தராஜுக்கும் பத்மாவதிக்கும் திருமணம் ஆகி 5 மாதங்கள் ஆன நிலையில் இந்த தீ விபத்து நடந்திருப்பது அந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தில் இடையே பெரும் ேசாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

புதுக்கோட்டை ரவுடி என்கவுன்ட்டர் விவகாரம்: போலீசார் விளக்கம்

65 திருக்கோயில்களில் குடமுழுக்கு தொடங்கியது

ஜூலை-12: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை