எரிவாயு மையத்தில் பயங்கர தீ: ரஷ்யாவில் 25 பேர் தீயில் கருகி பரிதாப சாவு

மாஸ்கோ: தாகெஸ்தானில் அமைந்துள்ள எரிவாயு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், இதுவரை 25 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் தெற்கே அமைந்துள்ள தாகெஸ்தானின் தலைநகரான மகச்சலாவின் நெடுஞ்சாலை ஓரத்தில் கார் பழுது நீக்கும் கடையில் உள்ளது. அந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீயானது பக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்க் பகுதியிலும் பரவியது.

இதனால் ஏற்பட்ட வெடி விபத்தால் பெட்ேரால் பங்கில் இருந்தவர்கள், ெபாதுமக்கள் உட்பட 25 பேர் உடல் கருகி பலியானதாகவும், சுமார் 66 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக ரஷ்யாவின் துணை சுகாதார அமைச்சர் விளாடிமிர் பிசென்கோ தெரிவித்துள்ளார். சுமார் 600 சதுர மீட்டர் பரப்பளவில் தீ பரவியிருந்ததால் தீயை அணைக்க தாமதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர் என்று பேரிடர் நிவாரண மையம் தெரிவித்துள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது