காஸ் சிலிண்டர் விழிப்புணர்வு முகாம்

ஸ்ரீபெரும்புதூர்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மொளச்சூர் பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மாநில சிறப்பு அலுவலர் அண்ணாதுரை, மண்டல பொது மேலாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு, காஸ் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விளக்கி பேசினர்.

இந்நிகழ்சியில், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதியை சேர்ந்த இண்டேன் சிலிண்டர் ஏஜென்சி நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில், காஸ் சிலிண்டர் கையாளும்போது எடுக்க வேண்டிய பல்வேறு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தீ தடுப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால் அதனை அவசர காலகட்டத்தில் பாதுகாப்பாக கையாள்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், காஸ் அவசர உதவி எண் 1906 என்ற அவசர எண்ணில் புகார் கொடுக்கும்போது, 2 மணி நேரத்திற்குள் அது எவ்வாறு சரி செய்யப்படுகிறது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த முகாமில், சென்னை கோட்ட சிறப்பு விற்பனை அலுவலர் கவிதா ரவிக்குமார், மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உமா மகேஸ்வரி, தனியார் கல்லூரி நிர்வாகி வித்யா வீரபாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு