ஊட்டியில் காற்றில் சாய்ந்த பூண்டு பயிர்கள்: விவசாயிகள் அச்சம்

ஊட்டி: ஊட்டியில் காற்று வீசி வரும் நிலையில், ஆடாசோலை பகுதியில் பூண்டு பயிர்கள் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பீட்ரூட், முள்ளங்கி மற்றும் பூண்டு ஆகியவை பயிரிடப்படுகின்றன. நீலகிரியில் பயிரிடப்படும் ஊட்டி பூண்டிற்கு விலை அதிகம் என்பதால், பெரும்பாலான விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தற்போது, ஊட்டி பூண்டு கிலோ ஒன்று ரூ.300 முதல் 400 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் பூண்டு பயிரிட்டுள்ளனர்.

பொதுவாக, பூண்டு பயிர்கள் சாய்ந்துவிட்டால், தரம் குறைந்து பாதிக்கும். இதனால், எப்போதும் இந்த பூண்டு பயிர்கள் நிலத்தில் சாய்ந்து விடாமல் விவசாயிகள் பாதுகாப்பது வாடிக்கை. தென்ேமற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் போது, சில சமயங்களில் காற்று வீசும் போது, பூண்டு பயிர்கள் சேதம் அடைவது வாடிக்கை. ஆனால், தற்போது வெயில் காலம் என்ற போதிலும் ஒரு சில பகுதிகளில் லேசான காற்று வீசி வருகிறது. இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள ஆடாசோலை பகுதியில் காற்றின் காரணமாக அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பூண்டு பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால், இதன் வளர்ச்சி குறைந்தும், தரம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் பூண்டு பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

 

Related posts

திமுக பவளவிழா பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது