பூண்டு ரசம்

தேவையானவை:

பூண்டு – 5 பற்கள்,
மிளகாய் வற்றல் – 2,
மிளகு – 2 ஸ்பூன்,
சீரகம் – 1 ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – 1 ஸ்பூன்,
தக்காளி – 1 (நறுக்கியது),
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவைக்கேற்ப,
புளி – பாதி எலுமிச்சைப் பழ அளவு,
தண்ணீர் – 2 கப்,
நெய் – 1 ஸ்பூன்,
கடுகு – 1/4 ஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 2,
கொத்தமல்லி இலை – சிறிதளவு.

செய்முறை:

பூண்டு, மிளகாய்வற்றல், மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து மிக்சியில் அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவும். பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெயை விட்டு, தக்காளி, கறிவேப்பிலை, பெருங்காய தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலந்து, புளி மற்றும் தண்ணீரை சேர்த்து, மூடிவைத்து நன்கு கொதிக்க விடவும். பிறகு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, மிளகாய்வற்றல், பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கும் கலவையை ஊற்றி கீழே இறக்கி கொத்தமல்லியை போட்டு மிளகு தூள் தூவவும். சுவைமிக்க ரசம் தயார்.

 

 

Related posts

பன்னீர் அல்வா

முட்டை இட்லி உப்புமா

செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி