சாலையோர குப்பை தொட்டியில் இருந்து 3 அடி உயர நடராஜர் சிலை மீட்பு: சிசிடிவி பதிவு மூலம் போலீசார் விசாரணை

சென்னை: வேப்பேரியில் உள்ள சாலையோர குப்பை தொட்டியில் இருந்து 3 அடி உயர நடராஜர் சிலையை, தூய்மை பணியாளர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த சிலையை வீசி சென்ற நபர்கள் குறித்து போலீசார் சிசிடிவி பதிவுகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேப்பேரி ஜெனரல் காலின்ஸ் சாலையில் உள்ள கல்லூரி அருகே, நேற்று முன்தினம் மாலை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பரமேஸ்வரி, கவுரி ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த குப்பை தொட்டியில் இருந்த குப்பையை கீழே கொட்டி, தரம் பிரித்தபோது, ஒரு கோணி பையில் கனமான பொருள் இருந்துள்ளது.

இதனால், அந்த பையை சோதனை செய்தபோது, அதில் 3 அடி உயர நடராஜர் சிலை இருந்தது தெரிந்தது. உடனடியாக, இதுபற்றி 58வது வார்டு தூய்மை ஆய்வாளர் தேவதாசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர், சம்பவ இடத்திற்கு வந்து, அந்த சிலையை மீட்டு, வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று, சிலையை வீசி ெசன்ற நபர் குறித்து விசாரிக்கின்றனர். மேலும், வீசப்பட்ட சிலை திருடப்பட்டதா அல்லது போலீசாருக்கு பயந்து குப்பை தொட்டியில் வீசப்பட்டதா எனவும், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு