கஞ்சா விற்ற வாலிபர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுகாவேரிப்பாக்கம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அருகே புதரில் தினந்தோறும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சந்திரவடிவு உத்தரவின்பேரில் எஸ்ஐ சந்திரசேகரன் தலைமையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் குருநாதன், சிவக்குமார் ஆகியோர் குறிப்பிட்ட சிறுகாவேரிப்பாக்கம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து, போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த வேலு மகன் வெங்கடேசன் (எ) வெங்காயம் (25) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. உடனடியாக வெங்கடேசனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த சுமார் 1 கிலோ 400 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வெங்கடேசனை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு