கஞ்சா விற்ற 29 பேர் சிக்கினர்

சென்னை: சென்னையில் போதைப்பொருட்கள் விற்பனைக்கு எதிராக போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை 7 நாட்களில் சென்னை காவல் எல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக தனித்தனியாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 29 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சா, 40 போதை மாத்திரைகள், 9 செல்போன்கள், ரூ.600 பணம், ஒரு பைக், 2 ஆட்டோ, 2 கார் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகரில் 2021ம் ஆண்டு முதல் நேற்று முன்தினம் வரையிலான காலத்தில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக 1,319 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,578 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கஞ்சா வியாபாரிகளின் 1,239 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒன்றிய அரசை கண்டித்து 5 நாட்கள் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: அவசர தீர்மானம் நிறைவேற்றம்

ஆந்திர எல்லை கிராமங்களில் வீடுகளில் கள்ளச்சாரயம் பதுக்கல்: பெண் உட்பட 4 பேர் கைது

லவா ஆற்றில் குடிநீர் திட்ட பணிகள் மீண்டும் தொடக்கம்: கலெக்டர் பேச்சுவார்தையால் சமரசம்