கஞ்சா கடத்திய மாடல் அழகி கைது ஏர்போர்ட்டில் தோழியுடன் சிக்கினார்

கேமன் தீவு: ஓவன் ராபர்ட்ஸ் சர்வதேச விமான நிலையம் வந்த மாடல் அழகியை சோதனை ெசய்த போது, அவரிடம் கஞ்சா இருந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.  கேமன் தீவை சேர்ந்த மாடல் அழகி ஜிகி ஹடிட், தனது தோழி லியா மெக்கார்த்தியுடன் கிராண்ட் கேமனில் உள்ள ஓவன் ராபர்ட்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். அங்கிருந்த சுங்கத்துறை அதிகாரிகள், ஜிகி ஹடிட்டின் உடமைகளை சோதனையிட்டனர்.

அப்போது அவரது பேக்கில் போதைப் பொருளான கஞ்சா இருந்தது. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் ஜிகி ஹடிட் மற்றும் அவரது தோழி மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். தொடர் விசாரணைக்கு பின்னர் அவர்கள் இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கு தலா 1,000 டாலர் அபராதம் விதித்தும், நீதிமன்ற விசாரணையில் ஆஜராகுமாறும் போலீசார் உத்தரவிட்டனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி