கஞ்சா வழக்கில் கைது விவகாரம் சிபிசிஐடி விசாரணை கோரிய மனு வேறு நீதிபதிக்கு மாற்றம்

 

மதுரை, ஏப். 27: கஞ்சா வழக்கில் கைது செய்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரிய மனு வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த மஞ்சுளா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் கிருஷ்ணகுமார், மதுரை நீதிமன்றத்தில் போலீசாருக்கு எதிராக தனி நபர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை திரும்ப பெறாததால், அவர் 21 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்கில் எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன், மனுதாரரின் கணவரின் ஜாமீன் மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், தென்மண்டல ஐஜிக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே, இந்த மனு மீதான விசாரணையும் அதே நீதிபதிக்கு மாற்றப்படுகிறது. அவர் முன் இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட வேண்டுமென பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை