கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வேலூர்: குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த காதர் பாஷா என்கின்ற காஜா (19), குலாப் (50), ஆகிய 2 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியாத்தம் டவுன் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். குடியாத்தம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குடியரசன் (24) என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தாலுகா போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதாலும் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி மதிவாணன், கலெக்டர் சுப்புலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் காஜா, குலாப், குடியரசன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு ஆணைகளை இன்ஸ்பெக்டர்கள் நேற்று சேலம் மத்திய சிறைச்சாலையில் சமர்ப்பித்தனர். மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுப்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி மதிவாணன் எச்சரித்துள்ளார்.

 

Related posts

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்; ‘குவாட்’ உச்சி மாநாட்டை கண்டு சீனா அஞ்சுவது ஏன்?.. வல்லரசு நாடுகளுடன் இந்தியா கைகோர்த்ததால் தலைவலி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை