விநாயகர் சதுர்த்தியின்போது சிலை கரைப்பு அனுமதிக்கு கட்டணம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகள் கரைப்புக்கு அனுமதி தர கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை செயலர் தலைமையிலான குழுவுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அனுமதி வழங்க வசூலிக்கப்படும் கட்டணத்தை அறிவிக்கப்பட்ட நீர்நிலைகள் பராமரிப்புக்கு செலவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைத்தால் விதிக்கப்படும் அபராதம் குறித்து விளம்பரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு