காந்திஜெயந்தி விடுமுறை ‘கட்’ 82 நிறுவனங்கள் மீது வழக்கு

ஈரோடு: கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் சாந்தி மற்றும் ஈரோடு, தொழிலாளர் இணை ஆணையர் மாதவன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி ஈரோடு, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் தொழிலாளர் துறையினர் காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்தனர். இதில், ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 106 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 82 நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமலும், பணிபுரிந்தவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்காமல் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் அந்த நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Related posts

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

அக்.03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!

கதர் தொழிலுக்கு கை கொடுக்கும் வகையில் கதர், கிராம பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்த்திட வேண்டும்: காந்தியடிகளின் பிறந்தநாளில் முதல்வர் வேண்டுகோள்