கந்தர்வகோட்டை பகுதியில் நாடா கட்டில் விற்பனை படுஜோர்

கந்தர்வகோட்டை:கந்தர்வகோட்டை பகுதியில் நாடா கட்டில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியங்கள் கிராமங்கள் சூழ்ந்த பகுதியாகும். விவசாயிகள் தோட்டத்திலும். வயல்களிலும், தங்கி ஆழ்துளை கிணற்றின் மூலம் இரவு பகல் நீர் பாய்ச்சி விவசாயம் செய்து வருகிறார்கள். தோட்டத்தில் வைத்துள்ள மர நிழல்களில் இரவு பகல் அமர்ந்து ஓய்வு எடுப்பது வழக்கம். கோடை காலம் என்பதாலும் பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கும் விடுமுறை என்பதால் குழந்தைகளும் விவசாய பணிக்கு வருகிறார்கள்.

அவர்கள் அமரவும் சற்று படுத்து ஓய்வெடுக்கவும் திருச்சி நகரில் இருந்து நாடா கட்டில்களை இருசக்கர வாகனங்களில் எடுத்து வந்து விற்பனை செய்துயும் நபர்களிடம் விவசாயிகள் கட்டில்கள் வாங்குகிறார்கள். இதனை தோட்ட பயன்களுக்கு வைத்து கொள்கிறார்கள். கட்டில் வியாபாரிகள் கூறும்போது, கோடை காலம் என்பதால் நாடாகட்டில், கயிறு கட்டில் நிறைய விற்பனையாகும் என்று கூறுகிறார்கள். விவசாயிகள் கூறும்போது வீட்டு அருகில் கட்டில் கொண்டு வருவதால் அதனை வாங்கி பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கிறார்கள்.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்