கம்புமாவு முருங்கைக்கீரை தோசை

தேவையானவை

கம்பு மாவு – 2 கப்
அரிசி மாவு – கால் கப்
உப்பு – தேவைக்கு
முருங்கைக்கீரை இலை – 1 கப் (கட் செய்தது)
வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 1
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை

அரிசி மாவு, கம்பு மாவு, உப்பு ஆகியவற்றுடன் தேவையான தண்ணீர் விட்டு கலக்கவும். தோசைமாவு பதம் இருந்தால்போதும். பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தைக் கட் பண்ணி சேர்க்கவும். முருங்கைக்கீரை இலைகளை சிறிதாக கட் பண்ணி சேர்க்கவும். நன்கு கலந்துவிட்டு தோசை சுடவும். சுற்றி எண்ணெய் விடவும். கம்புதோசை ரெடி. சூடாகச் சட்னி வைத்து சாப்பிடவும். இரும்புச்சத்து நிறைந்தது. தோசை மேலேயும் கீரையைத் தூவி சுடலாம். நன்றாக இருக்கும். மாவுடன் கலந்தும் சுடலாம்.

Related posts

கிரில் ஃபிஷ்

பிளம் கேக் பால்ஸ்

செட்டிநாடு முருங்கைக்காய் மட்டன் மசாலா