கேலோ இந்தியா கபடி போட்டிகள் இன்று தொடக்கம்

சென்னை : 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டித் தொடர் சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் (ஜன. 19-31) நடைபெற உள்ளது. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து, யு-18 பிரிவில் 6000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு 27 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காட்சிப் போட்டியாக இடம்பெறுகிறது. தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டரங்கில் நாளை நடக்க உள்ளது.

இந்நிலையில், கபடி போட்டிகள் இன்று தொடங்குகின்றன. மகளிர் கபடி ஏ பிரிவில் அரியானா, தமிழ்நாடு, தெலங்கானா, மகாராஷ்டிரா, பி பிரிவில் பீகார், மேற்கு வங்கம், இமாச்சல், சண்டிகர் அணிகள் இடம் பெற்றுள்ளன. இன்று மாலை நடக்கும் தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு – அரியானா அணிகள் மோதுகின்றன. ஆண்கள் கபடியிலும் தமிழ்நாடு அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று அரியானாவுடன் மோதுகிறது.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு