மாமல்லபுரத்தில் ஜி20 மாநாடு சுற்றுலா வழிகாட்டிகள் ஆலோசனை கூட்டம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ஜி 20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு வழிகாட்டியாக செயல்பட சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் இன்று மாலை மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்கின்றனர். மாமல்லபுரம் தனியார் ரிசார்ட்டில் ஜி20 உச்சி மாநாட்டின் 3வது நிதி செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. இன்று, மதியம் மாநாடு நிறைவு பெறுகிறது. இதையடுத்து, மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் 80க்கும் மேற்பட்டோர் மாலை 4 மணிக்கு மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளனர்.

இவர்களுக்கு, வழிகாட்டியாக செயல்பட மாமல்லபுரத்தை சேர்ந்த உள்ளூர் வழிகாட்டிகள் 10 பேரை தமிழக சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு புராதன சின்னங்களின் வரலாறுகளை எடுத்துக் கூறுவது குறித்து சுற்றுலா வழிகாட்டிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை மாமல்லபுரம் சுற்றுலா அலுவலகத்தில், சுற்றுலா அலுவலர் சக்திவேல் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில், வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு புராதன சின்னங்கள் எந்த காலத்தில், எந்த மன்னரால் செதுக்கப்பட்டது குறித்து தெளிவாக விளக்கிக் கூற வேண்டும். தவறான தகவல்களை தெரிவிக்கக் கூடாது. ஒரே மாதிரியான உடை அணிய வேண்டும். அனைத்து சுற்றுலா வழிகாட்டிகளும் மாலை 4 மணிக்கு ஐந்து ரதம் பகுதியில் ஆஜராக வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், துணை சுற்றுலா அலுவலர் கார்த்திக், சுற்றுலா வழிகாட்டிகள் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

ஜமைக்கா நாட்டை துவம்சம் செய்த ‘பெரில்’ புயல் : மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் வீசும் பலத்த காற்று; தொடர் கனமழை!!

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் மழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழப்பு