எதிர்கால தேவைகள், கனவுகள் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கென தனித்துவமான மாநில கொள்கை வகுக்க உறுதி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக. தமிழ்நாட்டின் வரலாற்று மரபு நிகழ்காலச் குழல் மற்றும் எதிர்காலத் தேவைகள் மற்றும் கனவுகள் ஆஃபவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு மாநிலத்திற்கென தனித்துவமானதொரு மாநிலக் கல்விக் கொள்கையினை வருக்க தமிழ்நாடு அரக உறுதிப் பூண்டுள்ளது. இதற்கென. நீதியரசர் (ஓய்வு) த. முருகேசன் அர்கள் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழு அமைத்து 01.06.2022 அன்று தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.

எதிர்கால தேவைகள், கனவுகள் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கென தனித்துவமான மாநில கொள்கை வகுக்க அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்துள்ளார். மாநில கல்விக்கொள்கையை வகுக்க ஜூன் 2022-ல் நீதியரசர் முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

மாநில கல்வி கொள்கை குழுவில் மேலும் 2 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் டிஃப்ரீடா ஞானராணி உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். தேசிய கல்வி கொள்கைக்கு மாற்றாக மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

மாநில கல்விக்கொள்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதலாக 4 மாதங்கள் அவகாசங்கள் தேவைப்படும் என்றும் மாநில கல்விக்கொள்கை குறித்த அறிக்கையை செப்டம்பர் மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு அளித்துள்ளனர்.

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்