பளபளப்பான முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல…

வாழைப்பழ ஃபேஷியல்: வாழைப்பழத்தை நன்கு பிசைந்து அத்துடன் தயிர் மற்றும் சிறிது தேன் கலந்து முகத்தில் ஃபேஷியல் செய்தால் பாதிப்படைந்த சரும செல்கள் புத்துணர்வு பெற்று சருமத்தை இறுக்கமடைய செய்து முகப்பருக்கள் வராமல் தடுக்கும்.

மாம்பழ ஃபேஷியல்: மாம்பழத்தை மசித்து அதில் சிறிது பால் சேர்த்து கலந்து ஃபேஷியல் செய்து வந்தால் சருமம் இறுக்கமடையும். வறட்சி நீங்கி முகம் பொலிவு பெறும்.

ஸ்ட்ராபெர்ரி ஃபேஷியல்: ஸ்டரா பெர்ரியை தயிருடன் கலந்து வாரத்திற்கு இரண்டு முறை ஃபேஷியல் செய்து வந்தால் பருக்கள் மறைந்துவிடும்.

ஆரஞ்சு ஃபேஷியல்: சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சுப் பழத்தை வைத்து ஃபேஷியல் செய்தால் இளமையான தோற்றம் கிடைக்கும். புத்துணர்வுடன் காட்சியளிக்கும்.

ஆப்பிள் ஃபேஷியல்: ஆப்பிளை அரைத்து அதோடு தேன் கலந்து முகத்தில் ஃபேஷியல் செய்து வந்தால் பழுப்பு நிற சருமம் மற்றும் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

அவகாடோ ஃபேஷியல்: அவகாடோ பழத்தை தேன், முட்டை (அ) தயிருடன் சேர்த்து கலந்து ஃபேஷியல் செய்து வந்தால் சருமம் மின்னும். கூந்தலுக்கு தடவி அலச ஊட்டம் கிடைக்கும்.

எலுமிச்சை ஃபேஷியல்: எலுமிச்சைப் பழத்தை பிழிந்து அதை ஃபேஷியல் செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பொலிவான சருமமும் கிடைக்கும். வறண்ட சருமத்தினர் வாரம் ஒருமுறை மட்டும் எலுமிச்சை முகத்திற்கு பயன்படுத்தவும்.

பப்பாளி ஃபேஷியல்: பப்பாளி ஃபேஷியல் செய்தால் சருமத்தை குளிர்வித்து முகம் பளபளக்க பெரிதும் உதவும்.பீச்பழ ஃபேஷியல்: சரும சுருக்கங்களை நீக்கும். சருமத்துளைகளில் உள்ள அடைப்புகளை நீக்கி அழகை உண்டாக்கும். பீச்பழத்துடன் தேனைக் கலந்து ஃபேஷியல் செய்தால் முகம் மேலும் அழகு பெறும்.

– காகை ஜெ. ரவிக்குமார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை