எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி பூம்புகார் மீனவர்கள் 37 பேர் சிறைபிடிப்பு

சீர்காழி: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி பூம்புகார் மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை (60) என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் சக்திவேல், செல்வம் ஆகியோரது 2 பைபர் படகு என மூன்று படகுகளுடன் கடந்த 20ம் தேதி இரவு 10 மணி அளவில் பூம்புகார் பகுதியைச் சேர்ந்த 37 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

பூம்புகார் கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற இவர்கள், நேற்று காலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி 37 மீனவர்களையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களது 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர். அவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பூம்புகார் பகுதியில் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related posts

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை விமான நிலையத்தில் விமானம் பழுதுபார்க்கும் எம்ஆர்ஓ மையம் அமைக்கும் திட்டம் ரத்தா?: தமிழக அரசு 32,300 சதுர அடி நிலம் வழங்கி 2 ஆண்டுகள் ஆகியும் ஆணையம் அலட்சியம்

இந்திய விமான படை சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடக்கம்!