இன்று முதல் 11ம் தேதி வரை மெரினாவில் பீச் வாலிபால் போட்டி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை, மெரினா கடற்கரையில் இன்று முதல் 11ம் தேதி வரை பீச் வாலிபால் போட்டி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: முதலமைச்சர் கோப்பை 2023 மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் 17 இடங்களில் கடந்த 1ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 38 மாவட்டங்களை சேர்ந்த 27,000க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டிகள் வரும் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் 2023 இன்று முதல் 11ம் தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் பீச் வாலிபால் போட்டிகள் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் மண்டல அளவில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் அணிகள் பங்கேற்க உள்ளனர். பள்ளி மாணவ மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும் கல்லூரி மாணவ மாணவியர் பிரிவில் தலா 18 அணிகளும் விளையாடுகின்றன. இந்த போட்டிகளை காண அனைவருக்கும் அனுமதி இலவசம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை