சேப்பாக்கத்தில் இருந்து…

* ஆஸி-இந்தியா இடையிலான 150வது ஒருநாள் ஆட்டம் இது

* உலக கோப்பைக்கான இந்திய அணியின் மூத்த கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா (36 வயது, 161 நாள்) பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் அசாருதீன் (36 வயது,124 நாள்),ராகுல் திராவிட்(34 வயது, 71 நாள்),வெங்கட்ராகவன் (34 வயது, 56 நாள்), தோனி (33 ஆண்டு, 262 நாள்) ஆகியோர் உள்ளனர்.

* 31வது ஓவரை தமிழ்நாட்டு மருமகன் பும்ரா வீச, தமிழ்நாட்டின் இன்னொரு மருமகன் மேக்ஸ்வெல் எதிர்கொண்டார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சஞ்சனா கணேசனை பும்ராவும், வினி ராமனை மேக்ஸ்வெல்லும் திருமணம் செய்துள்ளனர்.

* ஆட்டத்தை பார்க்க ஹர்பஜன் சிங், கவுதம் கம்பீர், ஸ்ரீகாந்த், சடகோபன் ரமேஷ், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வந்திருந்தனர்.

* ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்காத சூர்யகுமார், களத்தில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக பீல்டிங் செய்தார். கடைசி ஓவர்களில் ஷ்ரேயாஸ் உள்ளே வந்து ஃபீல்டிங்கில் ஈடுபட்டார்.

* உலக கோப்பை ஆட்டங்களில் குறைந்த இன்னிங்சில் விரைவாக 1000 ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை வார்னர் (19 இன்னிங்ஸ்) பெற்றார். இதற்கு முன் சச்சின், டி வில்லியர்ஸ் 20வது இன்னிங்சிலும், ரிச்சர்ட்ஸ், கங்குலி 21 இன்னிங்சிலும் இந்த இலக்கை எட்டினர்.

* உலக கோப்பையில் ஆஸி.க்காக 1000 ரன் கடந்த 4வது வீரர் என்ற பெருமை வார்னருக்கு கிடைத்துள்ளது. முதல் 3 இடங்களில் பான்டிங் (1743), கில்கிறிஸ்ட் (1085), மார்க் வாஹ் (1004) உள்ளனர்.

* உலக கோப்பையில் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் இஷான், ஷ்ரேயாஸ் இணைந்துள்ளனர்.

* உலக கோப்பையில் தொடக்க ஆட்டக்காரர்கள் இப்படி டக் அவுட் ஆவது இது 7வது முறை.

* ஒருநாள் போட்டியில் இந்தியாவின் 3 முன்வரிசை பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆவது இதுவே முதல் முறை.

* ஆஸி. வேகம் ஸ்டார்க் உலக கோப்பையில் தனது 50வது விக்கெட்டாக இஷான் கிஷனை வீழ்த்தினார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது