நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘நண்பர்களுக்கு ஆதாயம் தரும் வகையில் நடந்து கொள்வது பிரதமர் மோடியின் முதன்மை பொருளாதார கொள்கையாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழில்துறையில் இரண்டு முன்னணி நிறுவனங்களின் வருவாய் பங்கு உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர், பிரபல பொருளாதார நிபுணர் வைரல் ஆச்சார்யா கூற்றின்படி அதானி குழுமம் உட்பட ஐந்து பெரிய கூட்டு நிறுவனங்கள் 40 துறைகளில் ஏகபோகத்தை உருவாக்கி வருகின்றன. இந்த வளர்ந்து வரும் ஏகபோகமானது இந்தியாவின் பலவீனமான பொருளாதார வளர்ச்சி, வேலையின்மை நெருக்கடி மற்றும் உயர் பணவீக்கம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்