பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; 4வது சுற்றில் கோகோ காஃப்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் தகுதி பெற்றார். 3வது சுற்றில் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவுடன் (24 வயது, 32வது ரேங்க்) நேற்று மோதிய கோகோ காஃப் (20 வயது, 3வது ரேங்க்) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 34 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 3வது சுற்றில் செர்பியாவின் ஓல்கா டானிலோவிச் (23 வயது, 125வது ரேங்க்) 0-6, 7-5, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் குரோஷியா நட்சத்திரம் டோனா வேகிச்சை (27 வயது) 40வது ரேங்க்) 3 மணி, 8 நிமிடம் போராடி வென்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் களமிறங்கிய இத்தாலி வீரர் யானிக் சின்னர் (22 வயது, 2வது ரேங்க்) 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் பவெல் கொடோவை (25 வயது, 56வது ரேங்க்) வீழ்த்தி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு 3வது சுற்றில் ரஷ்ய நட்சத்திரம் ஆந்த்ரே ருப்லேவ் (26 வயது, 6வது ரேங்க்) 6-7 (6-8), 2-6, 4-6 என்ற நேர் செட்களில் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியிடம் (23 வயது, 35வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் தமிழக வீரர் என்.எஸ்.பாலாஜி – எம்.ஏ.வரேலா மார்ட்டின்ஸ் (மெக்சிகோ) இணை நேற்று 6-3, 6-4 என நேர் செட்களில் ரீஸ் ஸ்டல்டெர் (அமெரிக்கா) – செம் வெர்பீக் (நெதர்லாந்து) இணையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.

 

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு