பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் சாம்பியன்: 23வது கிராண்ட் ஸ்லாம் பட்டம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச், 23வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்துடன் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாதனையை முறியடித்து முதலிடத்துக்கு முன்னேறினார். பரபரப்பான இறுதிப் போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் (24 வயது, 4வது ரேங்க்) உடன் நேற்று மோதிய ஜோகோவிச் (36 வயது, 3வது ரேங்க்), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை 7-6 (7-1) என்ற கணக்கில் போராடி வென்று முன்னிலை பெற்றார். அதே வேகத்துடன் 2வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3 என கைப்பற்றி முன்னிலையை மேலும் அதிகரித்தார்.

3வது செட்டில் கேஸ்பர் கடுமையாகப் போராடினாலும், அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளைக் குவித்த ஜோகோவிச் 7-6 (7-1), 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வென்று 3வது முறையாக பிரெஞ் ஓபன் கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 3 மணி, 13 நிமிடத்துக்கு நீடித்தது. 23வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச், ஸ்பெயினின் நடாலை (22 பட்டம்) 2வது இடத்துக்கு தள்ளி மகத்தான சாதனை படைத்தார்.
அவர் இதுவரை ஆஸ்திரேலிய ஓபனில் 10, பிரெஞ்ச் ஓபனில் 3, விம்பிள்டனில் 7, யுஎஸ் ஓபனில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்