ஒரே நாளில் 3 சரக்கு ரயில்கள் தடம் புரண்டு விபத்து

கவுகாத்தி: மேற்கு வங்கம், நியூ ஜல்பைகுரியில் இருந்து கதிஹாருக்கு நேற்று சரக்கு ரயில் சென்றது. இந்த நிலையில், குமேத்பூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் 5 பெட்ரோல் டேங்கர்கள் தடம் புரண்டன. சரக்கு ரயில் தடம் புரண்டதால் நியூ ஜல்பைகுரி மற்றும் கதிஹார் இடையே ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதே போல், உபி மாநிலம் பிரயாக்ராஜ் கோட்டத்துக்கு உட்பட்ட அலிகாரில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன.

மேலும், கோவாவில் இருந்து கர்நாடகாவுக்கு நேற்று ஒரு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. இரு மாநிலங்களின் எல்லை பகுதியான தூத்சாகர்-சோனாலியம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வந்த போது திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் 3 ரயில்கள் வேறு மார்க்கமாக திருப்பி விடப்பட்டது. 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தென் மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார். நேற்று மட்டும் மேற்கு வங்கம்,உபி, கோவா ஆகிய மாநிலங்களில் 3சரக்கு ரயில்கள் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தமிழாசிரியர் பணிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமா?: சு.வெங்கடேசன் கடிதம்

20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

மதுரவாயலில் ஷவர்மா சாப்பிட்டதால் பள்ளி ஆசிரியை உயிரிழப்பா..? போலீசார் விசாரணை