ஒன்றிய அரசு அறிவித்துள்ள காலி பணியிட தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: ஒன்றிய அரசு அறிவித்துள்ள காலி பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க இருப்பதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு தோராயமாக 7,500 (இந்தியா முழுவதும்) பணிக்காலியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரி பணியிடங்களுக்கான உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமான வரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடக்க இருப்பதாக ஒன்றிய அரசுப்பணி தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகாலியிடங்களுக்கு கல்வித்தகுதி பட்டப்படிப்பாகும்.

மேலும், இப்பணிக்கான வயது வரம்பு 1.8.2023ம் தேதியில் 18 முதல் 27 வயது பூர்த்தியாகி இருக்கவேண்டும். மேலும், வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 வருடங்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உண்டு. இப்பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 3.5.2023. மேலும், விவரங்கள் அறிந்துகொள்ளவும் விண்ணப்பிக்கவும் https://ssc.nic.in/ என்ற இணைதள முகவரியை பயன்படுத்திக் கொள்ளலாம். காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக மேற்காணும் போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் 20.4.2023 அன்று நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்போட்டி தேர்விற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன் பெறலாம். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் அட்டை ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். மேலும், 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் காஞ்சிபுரம் மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்