இலவச கண் சிகிச்சை முகாம்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி சாலை விதிகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதனையொட்டி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு, பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் ஆலோசனையின்படி, வட்டார போக்குவரத்து மோட்டார் ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் கண் சிகிச்சை முகாமை ஏற்பாடு செய்திருந்தார். இந்த முகாம், காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில் உள்ள வாசன் ஐகேர் மருத்துவமனையுடன் இணைந்து நடந்தது. இதில், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்புரை மற்றும் கண்ணில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதற்கு தகுந்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

 

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது