மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி: அமைச்சர் சேகர் பாபு வழங்கினார்

அம்பத்தூர்: மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சேகர் பாபு வழங்கினார். சென்னை அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 5 பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 1,224 மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி, அம்பத்தூர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், பெருநகர சென்னை வளர்ச்சி குழுமத்தலைவருமான பி.கே.சேகர்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

பி.கே.சேகர்பாபு பெசியதாவது: நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். நன்றாக படியுங்கள். நம் முதல்வர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு படிக்கட்டாக உள்ளார், படிப்பதற்கு திக்கு திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியருக்கு படகின் தோணியாக இருக்கின்றார். நம் முதல்வர் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதெல்லாம் ஒற்றை வார்த்தையை சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

நம்மிடமிருந்து திருட முடியாதது, பறிக்க முடியாதது கல்வி மட்டும் தான், அதற்காகத்தான் விளிம்பு நிலையில் இருக்கின்ற அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ, மாணவிகள் உயர்கல்வி முடிந்து கல்லூரிகளுக்கு செல்லும் போது, இந்திய துணை கண்டத்திலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகையை வழங்குகிறார். படிப்பதற்கு எண்ணற்ற உதவிகளை செய்து கொண்டிருப்பவர் நம் முதல்வர். இந்த நாடு உயர வேண்டும், பொருளாதாரத்தில் மக்கள் உயர வேண்டும்.

இன்றைய மாணவர்கள் தான் நாளைய தலைமுறை என்பதை மனதிலே வைத்து தான் ஆட்சியின்போது கடும்பொருளாதார நெருக்கடி இருந்தாலும் கடந்த ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட நிதி பற்றாக்குறை இருந்தாலும் மாணவச் செல்வங்களை பாதிக்காதவகையில் மிதிவண்டிகளை தரவேண்டும் என்று உத்தரவிட்டவர் நம் முதல்வர் என்று பேசினார். நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வனிதா ராணி, அம்பத்தூர் மண்டல குழு தலைவர் மூர்த்தி, அம்பத்தூர் தெற்கு பகுதி செயலாளர் நாகராஜ், மாமன்ற உறுப்பினர் சாந்தகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு

மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா.! கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா