பொதுமக்களை மோசடியில் இருந்து பாதுக்காக்க தமிழ்நாடு காவல்துறை சைபர் குற்றப்பிரிவு புதிய ஏற்பாடு

சென்னை: அனைவரும் தங்கள் படைப்பாற்றல், புதுமை மற்றும் எல்லையற்ற திறமை ஆகியவற்றை வெளிப்படுத்த தமிழ்நாடு காவல்துறை சைபர்குற்றப்பிரிவு குறும்பட போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. வழக்கமான கதை சொல்லல் மற்றும் காட்சி வெளிப்பாட்டின் எல்லைகளைத்தாண்டி, பங்கேற்பாளர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்த போட்டியில் எப்படி பங்கேற்பது:
பங்கேற்பாளர்கள் 12.06.2024 முதல் 25.06.2024 வரை Google form மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். அனுபவத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் காட்சிக்கதை சொல்லலில் ஆர்வமுள்ள அனைத்து நபர்களும் பதிவு செய்யலாம். பங்கேற்பாளர்கள் தங்களின் குறும்படங்களை கொடுக்கப்பட்ட கருப்பொருளுக்கு ஏற்றவாறு சமர்ப்பிக்க வேண்டும். குறும்படங்களை Google Drive-ல் பதிவேற்றம் செய்து அதற்கான Link-ஐ 27.06.2024க்குள் Google form-ல் பகிர வேண்டும்.

போட்டி தலைப்புகள்:
1. கூரியர் மோசடி (Courier/FedEx fraud)
2. வர்த்தகம் /முதலீட்டு மோசடி(Trading/Investment Scam)
3. மின்கட்டண மோசடி (EB Charges Scam)
4. டிஜிட்டல் கைது மோசடி (Digital Arrest Scam)
5. கல்வி உதவித்தொகை மோசடி(Scholarship Scam)

பரிசுகள்:
முதல் பரிசு: ரூ.30,000
2வது பரிசு: ரூ.20,000
3வது பரிசு: ரூ.15,000

05.07.2024 அன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். போட்டி தொடர்பான பிரத்தியேக தகவல்களுக்கு சமூக ஊடகங்களில் எங்களைப் பின் தொடரவும் [@tncybercrimeoff). உங்கள் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

Related posts

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது அக்னி வீர் திட்டம் நீக்கப்படும்: மக்களவையில் அகிலேஷ் யாதவ் உரை

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 27 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

அதிமுக ஆட்சியில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.325 ஆக உயர்வு!!