ரூ.300 கோடி மோசடி விவகாரம் மார்க்சிஸ்ட் எம்எல்ஏவிடம் அமலாக்கத்துறை விசாரணை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே கருவன்னூர் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இந்த வங்கியில் ரூ.300 கோடி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையில் கேரள முன்னாள் அமைச்சரும், தற்போதைய மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான மொய்தீனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி 2 முறை மொய்தீனுக்கு மத்திய அமலாக்கத்துறை நோட்டீஸ் கொடுத்தது. ஆனால் 2 முறையும் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து 11ம் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி 3வது முறையாக அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் மொய்தீன் கொச்சியிலுள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இந்த விசாரணை 10 மணி நேரத்திற்கு மேல் இரவு வரை நீடித்தது. காங். தலைவரிடம் விசாரணை: மோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் சுதாகரனிடம் அமலாக்கத்துறையினர் எர்ணாகுளத்தில் நேற்று விசாரணை நடத்தினர்.

Related posts

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை