ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் தம்பியிடம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி விசாரணை

கரூர்: கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷிடம் ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலம் அபகரிப்பு புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது உறவினர் பிரவீன் (28), உடந்தையாக இருந்த வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கில் விஜயபாஸ்கரின் தம்பி சேகரின் முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சேகரை சிபிசிஐடி போலீசார், கரூர் சின்னாண்டாங்கோயில் பகுதியில் கடந்த 2ம் தேதி கைது செய்தனர்.

மேலும் தோட்டக்குறிச்சியை சேர்ந்த செல்வராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரும் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நிலமோசடி வழக்கு சம்பந்தமாக சேகரை 2 நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் காந்தி கிராமத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் இரவு 11 மணி வரை விசாரணை நடந்தது. இந்நிலையில் நேற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை விசாரணை நடந்தது. இன்றும் காலை 8 மணி முதல் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்றுடன் கஸ்டடி முடிவதால் மாலை 6 மணிக்கு சேகரை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Related posts

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நவ. 2வது வாரத்தில் பேரவை தேர்தல்: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கணிப்பு

மடுவு நீர்வழிப் பாதையை சுத்தப்படுத்தும் பணிகள், பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முடிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!

மாணவர்களின் திறன் வளர்க்கும் அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின்