ரூ.1.13 கோடி மோசடி வழக்கு விசிக பெண் நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சேலம்: சேலம் அம்மாப்பேட்டை வித்யாநகரை சேர்ந்தவர் காயத்ரி (43). சேலம் மாநகர விசிக நிர்வாகி. இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சமூகநலத்துறை உயர்அதிகாரி எனக் கூறி அரசு வேலை வாங்கி தருவதாக ஏராளமானோரிடம் ரூ.1.13 கோடி மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து சென்னையில் பதுங்கியிருந்த காயத்ரியை கடந்த மாதம் கைது செய்து, சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

அவருக்கு துணையாக இருந்ததுடன் மிரட்டல் விடுத்த கார் டிரைவர் அசோக்குமார், ராஜசேகர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். காயத்ரி, அசோக்குமார், ராஜசேகர் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தற்போது மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி சேலம் பெண்கள் சிறையில் உள்ள காயத்ரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதேபோல் அசோக்குமார், ராஜசேகர் ஆகியோரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Related posts

தலைவர்கள் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை

முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சித்தூர் மாநகரத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு