பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 பேர் பலி!!

பாரீஸ் : பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் திடீரென ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். ஈஸ்டர் விடுமுறையை கொண்டாடுவதற்காக பயணிகள் ஆல்ப்ஸ் மலைத் தொடரில் குவிந்திருந்த நிலையில், பனிச்சரிவானது ஏற்பட்டுள்ளது. மலைத் தொடரின் தென்மேற்கு பகுதியில் உள்ள மாண்ட்-பிளாங்க் என்ற இடத்தில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை பிரான்ஸ் அரசின் உள்துறை அமைச்சர் Gerald Darmanin உறுதி செய்துள்ளார்.

பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்த நிலையில்,9 பேர் காயம் அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். பனிச்சரிவானது 3,500 மீட்டர் உயரத்தில் 500 மீட்டர் முதல் 1 கிமீ தூரத்திற்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் சின்னர், ஜாஸ்மின் 2வது சுற்றில் வெற்றி

பள்ளி நேரத்திற்கு ஏற்ப பேருந்து நேரம் மாற்றம்; திருப்போரூர் எம்எல்ஏவுக்கு மாணவர்கள் நன்றி

பூந்தமல்லி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்