பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல பஞ்சாப் முதல்வருக்கு அனுமதி மறுப்பு

சண்டிகர்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. ஒலிம்பிக் போட்டியில பங்கேற்றுள்ள இந்திய ஹாக்கி அணி விளையாடும் போட்டியை காண்பதற்காகவும், அவர்களை ஊக்குவிக்கவும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பிரான்ஸ் செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார். நேற்று முதல் 9ம் தேதி வரை பிரான்ஸ் செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் முதல்வர் பகவந்த் மானுக்கு ஒன்றிய அரசு அரசியல் அனுமதி வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஒன்றிய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘‘முதல்வர் பகவந்த் மான் இசட் பிரிவு பாதுகாப்பை பெற்றுள்ள அரசியல் தலைவர். குறுகிய காலத்தில் அவருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய இயலாது. தாமதமாக கோரிக்கை வைத்ததால் அனுமதி மறுக்கப்பட்டது’’ என தெரிவித்துள்ளன.

Related posts

திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி