பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வென்ற இடதுசாரி கட்சி: தோல்வி காரணமாக ஆளுங்கட்சி தரப்பில் போராட்டம்

பாரிஸ்: பிரான்சில் நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான இடதுசாரி கட்சி அதிக இடங்களை கைப்பற்றியதை தொடர்ந்து ஆளுங்கட்சி தரப்பில் நடத்திய போராட்டம் கலவரத்தில் முடிந்தது. பிரான்சில் 577 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஜூன் 30 மற்றும் ஜூலை 7ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் அதிபர் இமானுவேலின் மையவாதி கூட்டணி, வலதுசாரி கூட்டணியான தேசிய பேரணி கூட்டணி, இடதுசாரி கூட்டணியான நியூ பாப்புலர் பிராண்ட் கூட்டணி என மும்முனை நிலவியது.

இந்நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இடதுசாரி கூட்டணி 180க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் தலைநகர் பாரிஸில் போராட்டம் நடத்தினர். திடீரென ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் கலவரம் வெடித்தது. அப்போது அங்கு இருந்த வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்ட போலீசார் கண்ணீர் புகைக்குண்டை வீசியதால் பதற்றம் நிலவியது. அசம்பாவிதங்களை தவிர்க்க பாரிஸில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்